வெள்ளளூர் நாட்டின்
"நாட்டாழ்வான்" மற்றும் "அம்பலக்காரர்கள்"

உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் /கள்வர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர்:கரியவன், வெட்சியர், பண்டையர், அரசர். நிலைப்படை நிலப்பகுதி கள்ளர் படைப்பற்று, குடியிருக்கும் தொகுதி கள்ளர்நாடு என்று பெயர்பெறும். கள்ளர்தடி(வளரி)

தெய்வ திருமகன்
வெள்ளலூர் நாட்டு சிற்பி
வீரணன் பெரிய அம்பலகாரர்

எங்களை பற்றி

மதுரை மாவட்டம், மேலூர் அருகே அமைந்துள்ளது ‘வெள்ளளூர்’ எனும் அழகிய கிராமம். இதனை ‘வெள்ளளூர் நாடு’ என அழைப்பர். 
வெள்ளலூர் என்பதன் பெயர்க்காரணம் வெள்ளிலையூர், வீரபாண்டிய நல்லூர் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் வெள்ளலூர் என்று அழைக்கபட்டதாகவும் கூறப்படுகிறது

நாடுகட்டமைப்பு

1)வளவு (வளவு என்பது பகுதி என்பதாகும்).
2)கிராமம்
3)மாகாணம்
4)நாடு

சில பகுதிகள் (வளவு) இணைந்தது கிராமமாகவும் சில கிராமங்கள் இணந்தது மாகாணமாகவும் பல மாகாணங்கள் இணந்தது ஒரு நாடு என்று அழைக்கப்படுகிறது அந்த நாட்டை மனிதன் உடலில் பல அங்கங்கள் இருப்பதை போன்று

1)தெய்வங்கள்
2)பெரிய அம்பலகாரர்
(நாட்டுத்தலைவர்)
3)அம்பலகாரர்
(கரைக்கான தலைவர்)
4.இளங்கச்சி அம்பலங்கள் 
(கரைக்கான துணை தலைவர்)
5.குடிமக்கள்
6.தலைநகரம்
7.மாகாணம் தலைநகர்கள்

ஏழு அங்கங்களாக வெள்ளலூர் நாடு திகழ்கிறது

பதிநாலு தன்னரசு கள்ளர் நாடுகளில் வெள்ளலூர் நாட்டின் பெரிய அம்பலகாரர் A.வெள்ளைச்சாமி அம்பலகாரர் என்ற அழகம்பலகாரர் காலம் : 15.7.1878 முதல் 14.1.1924

இந்நாடு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய அழிவிற்கு உள்ளாகி இருக்கிறது நாட்டில் உள்ள அனைவரும் சிதறி விட்டனர் வீரணன் அம்பலகாரர் என்பவர் இந்தப் பேரழிவில் இருந்து தப்பியவர்களை ஒன்று திரட்டி முறை படுத்தினார். இது

  1. வெள்ளலூர் மாகாணம் 
  2. அம்பலகாரன்பட்டி மாகாணம்
  3. மலம்பட்டி மாகாணம்
  4. உறங்கான்பட்டி மாகாணம் 
  5. குறிச்சிப்பட்டி மாகாணம்
என ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது .
 
இந்த ஐந்து மாகாணங்களில் பரவி வாழும் கள்ளர் இன மக்கள் தந்தை வழியில் 
 
வெள்ளளூர் நாட்டுக்கள்ளர்களின் பதினொரு கரை + கூட்டம்
  1. முண்டவாசி கரை 
  2. வேங்கைபுலி கரை 
  3. சம்மட்டி கரை 
  4. நய்க்கான் கரை 
  5. சாயும்படை தாங்கிகரை 
  6. வெக்காளி கரை 
  7. சலுப்புலி கரை 
  8. திருமான்+போக்கி கரை 
  9. செம்புலி கரை 
  10. நண்டான் + கோப்பன் கரை 
  11. பூலான் + மழவராயன் கரை 

என 11 கரைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர் இங்கு ஒவ்வொரு கரைக்கும் இரண்டு அம்பலம் என 24 அம்பலகாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு கரைக்கும் 2 இளங்கச்சிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்

இளங்கச்சிகள் என்பவர்கள் அம்பலகாரர்களுக்கு உதவியாளர்கள் ஆவர். இந்நாட்டின் பெரிய அம்பலகாரர் கரை அடிப்படையில் இந்த 11 கரைகாரர்களுக்குள் சுழற்சி முறையில்  செய்யப்படுகிறார். இவரே கரை அம்பலங்களின் கூட்டத்திற்கும் நாட்டுக்கூட்டத்திற்கும் தலைமை வகிக்கின்றார். இவரது முடிவே இறுதியானதாக கருதப்படுகின்றது

வெள்ளலூர் நாடு சிதைவுற்று முறைபடுத்தப்பட்ட காலத்திற்கு பின்பு இதுவரை 10 பெரிய அம்பலகாரர்கள் பொறுப்பில் இருந்துள்ளனர் .

ஏழை காத்த அம்மன் கோவிலும் வல்லடிகாரர் கோவிலும் இந்நாட்டின் பொது கோவிலாகும் இவற்றிக்கு முறையே புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் 10 நாள்கள் விழா எடுத்து சிறப்பிக்கின்றனர் .

© Vellalurnadu.in 2025 All Rights Reserved.